சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய கோயில் தேவசம் ஒப்புதல்!

Report Print Kabilan in இந்தியா

கேரளாவில் உள்ள சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாக தேவசம் போர்ட் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சென்று வழிபடலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், ஐயப்ப பக்தர்கள் மற்றும் தேவசம் போர்டு இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கேரளாவில் போராட்டம் வெடித்தது.

எனினும், பெண் பக்தர்கள் சிலர் மாலை அணிந்து கொண்டு கோயிலுக்குள் நுழைய முற்பட்டனர். அவர் அனைவருக்கும் ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெண் பக்தர்கள் திரும்பி சென்றுவிட்டனர்.

இறுதியில் அதிகாலை நேரத்தில் இரண்டு பெண்கள் மட்டும் சாமி தரிசனம் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், அகில இந்திய ஐயப்ப சேவா சங்கம் மற்றும் நாயர் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், பெண்களை அனுமதிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்தன.

இந்நிலையில், அந்த மறுசீராய்வு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதாகவும், இத்தனை நாட்கள் தாங்கள் பின்பற்றி வந்த நிலைபாட்டை மாற்றிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers