16 வயதில் நடிகை குஷ்புவின் மகள் செய்யும் ஆச்சரிய செயல்: குவியும் வாழ்த்துக்கள்

Report Print Raju Raju in இந்தியா

நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா தன்னுடைய நண்பருடன் சேர்ந்து அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் வலைதளத்தை தொடங்கியுள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவின் மகளான அனந்திதாவுக்கு 16 வயதாகிறது.

இந்நிலையில் அனந்திதா தன்னுடைய நண்பர் ஜைனா ஃபாஸல் என்பவருடன் இணைந்து இணையதளத்தில், அழகு சாதன பொருட்கள், கீரிம், உள்ளிட்டவை விற்பனை செய்யும் வலைத்தளத்தை துவங்கியுள்ளார். மேலும் ANMOL என்று அதற்கு பிராண்ட் பெயர் வைத்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் நடிகை குஷ்பு பதிவிடுகையில், அவள் எங்கள் பெருமை, எங்கள் குழந்தை. அவள் தற்போது சிறகு விரித்து பறக்க துவங்கிவிட்டாள் என கூறி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அனந்திதா துவங்கியுள்ள புது தொழில் வெற்றி பெற பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...