எங்க வீட்டு பொண்ணோட தொடர்புல இருக்கியா? குடும்பத்தினரால் இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் தங்கள் வீட்டு பெண்ணுடன் தொடர்பில் இருந்த இளைஞரை பெண்ணின் குடும்பத்தார் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் ஹர்ஜீத் சிங் (30). இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் சில காலமாக தொடர்பு ஏற்பட்டது.

இதையறிந்த பெண்ணின் குடும்பத்தார் ஹர்ஜீத் சிங்கை தனியாக சந்தித்து தங்கள் வீட்டு பெண்ணுடனான தொடர்பை விட்டுவிடும் படி கூறினர்.

பின்னர் அவரை மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அங்கு வந்த பொலிசார் ஹர்ஜீத் சிங்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஹர்ஜீத் சிங்கின் உடல் நிலை நேற்று காலை மோசமடைந்தது.

அவரை மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் ஹர்ஜீத் சிங்குடன் தொடர்பில் இருந்த பெண்ணின் தந்தை நனக் சிங், மற்றும் உறவினர்களான ஷரவன், சுர்முக் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers