சாமி உதவ சொன்னார் என கூறி பெண்களை மயக்கிய மந்திரவாதி... 45 நாட்களுக்கு பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மக்களிடம் தலா 2 லட்சம் ரூபாய் வசூலித்துக் கொண்டு குட்டிச்சாத்தான் மகிமையால், மூட்டை மூட்டையாக பணம் வரும் அதிர்ஷ்ட பீரோ என்று, காலி பீரோவை கொடுத்து ஏமாற்றிய மந்திரவாதியை பொலிசார் தேடி வருகின்றனர்.

மதுரை மந்திகுளம் பகுதிக்கு பாலசுப்ரமணியன் என்ற மந்திரவாதி ஒரு வருடத்திற்கு முன்பு குடும்பத்துடன் குடிவந்தார்.

அங்குள்ளவர்களிடம் தன்னிடம் மாந்திரீக சக்தி இருப்பதாக கூறி கற்பூரத்தை கையில் வைத்து கொளுத்தி வாயில் போட்டு விழுங்கி சாமி வந்தது போல் நடிப்பதையும் வழக்கமாக்கி உள்ளார்.

தன்னிடம் குறி கேட்க வருபவர்களிடம் சாமியிடம் என்ன வேணும் கேள் என்று கூறி அவரே, பணம் வேண்டுமா என்று கூறியவாறு மந்திரத்தில் இருந்து 72 ஆயிரம் ரூபாயை வரவைத்து கொடுப்பது போல குறிகேட்க வந்தவர்களிடம் கொடுத்து ஆசையை தூண்டி விட்டுள்ளார். இதனால் அவரை சக்தி மிக்க மந்திரவாதியாக அந்த பகுதி பெண்கள் உட்பட அனைவரும் நம்பியுள்ளனர்.

தனது மகன் சினிமாவில் நாயகனாக நடிப்பதாகவும், தனக்கு மேல்மட்ட அளவில் பல்வேறு அரசியல் தலைவர்களும் மிகவும் நெருக்கம் எனவும் கூற அவரை நம்பி ஏராளமானோர் அருள் வாக்கு கேட்க குவிந்தனர்.

இதனை தொடர்ந்து தன்னிடம் குறி கேட்க வந்தவர்களிடம் உன் கஷ்டத்தை போக்க சாமி பணம் கொடுத்து உதவ சொன்னார் என்றும் தன்னிடம் குட்டிச்சாத்தான் மகிமையினால் மூட்டை மூட்டையாக பணத்தை கொட்டிக் கொடுக்கும் அதிர்ஷ்ட பீரோ உள்ளது என்றும் அதை 45 நாட்கள் வீட்டில் வைத்து பூஜை செய்த பிறகு தான் சொல்லும் நேரத்தில் திறந்து பார்த்தால் பல கோடி பணம் இருக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பி அப்பகுதி மக்கள் வட்டிக்கு கடன் வாங்கியும், வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தும், 2 லட்சம் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரை ஆளுக்கு தகுந்தார் போல் பணத்தை அவரிடம் கொடுத்து பீரோவை வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்துள்ளனர்.

இதனால் 30க்கும் மேற்பட்டோரிடம் இருந்து 50 லட்ச ரூபாய்க்கும் மேல் வாரிச்சுருட்டியுள்ளார் பால சுப்பிரமணியன்.

45 நாட்களுக்கு மேல் பூஜை செய்த பின்னரும் பீரோவை திறக்க பாலசுப்ரமணியன் அனுமதிக்கவில்லை இதனால் சந்தேகமடைந்தவர்கள் மந்திரவாதி பாலசுப்ரமணியனை நெருக்கியுள்ளனர்.

சம்பவத்தன்று இன்றிரவு பூஜை செய்கிறேன் அதன் பிறகு பீரோவை திறந்தால் பல கோடி ரூபாய் அதில் இருக்கும் கூறி மக்களை சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார் மந்திரவாதி.

மறுநாள் காலை அனைவரும் பீரோவை திறந்த போது அதில் ஒன்றுமே இல்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மந்திரவாதியின் வீட்டுக்கு சென்ற போது அவர் குடும்பத்துடன் வீட்டை காலி செய்து விட்டு ஊரை விட்டு சென்றது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

பல லட்ச ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் , தங்கள் பணத்தை மந்திரவாதியிடம் இருந்து திரும்ப பெற நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers