ஆட்டோவில் இருந்து கேட்ட இளைஞரின் கதறல் சத்தம்: உயிரை பணயம் வைத்து தனியாளாக காப்பாற்றிய பொலிஸ்

Report Print Vijay Amburore in இந்தியா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை செய்வதற்காக 4 பேரால் ஆட்டோவில் கடத்தப்பட்ட இளைஞரை பொலிஸார் ஒருவர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரி. இவர் அதேபகுதியை சேர்ந்த மதன் என்பவரின் மனைவியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இதை தெரிந்துகொண்ட மதன், 4 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து ஹரியை ஆட்டோவில் கடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் பயந்துபோன ஹரி உதவி கேட்டு அலற ஆரம்பித்துள்ளார். இதனை கேட்டு திடுக்கிட்ட காவல் உதவி ஆய்வாளர் இரண்டு பேரை மடக்கி பிடித்து கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினார்.

பின்னர் படுகாயங்களுடன் இருந்தும் ஹரியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் தனி ஒருவனாக நின்று கொலை முயற்சியை தடுத்த பொலிஸாருக்கு உயர் அதிகாரிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்