கார் நம்பரை 31 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்த தொழிலதிபர்!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் தொழிலதிபர் ஒருவர் தனது காருக்கு மிக பேன்ஸியான நம்பரை ரூ.31 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கே.எஸ்.பாலகோபால். இவர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ஸ்சி 718 பாக்ஸ்டர் என்ற நீல நிற ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வாங்கினார்.

இந்த காருக்கு பேன்ஸியான எண்ணை வாங்க நினைத்த கே.எஸ்.பாலகோபால், அதற்கான ஏலத்தில் பங்குபெற்றார். ‘KL-01-CK-1' என்ற கார் எண்ணுக்காக வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரான ஷைன் யூசுஃப், ரூ.25 லட்ச ரூபாயை ஏலத்தில் கேட்டார்.

ஆனால், அதே எண்ணை ரூ.31 லட்சத்துக்கு கே.எஸ்.பாலகோபால் ஏலம் கோரி அதனை தனதாக்கினார். இதற்கு முன்பாகவே 2017ஆம் ஆண்டு கார் எண் ஒன்றை ரூ.19 லட்சத்திற்கு எடுத்திருந்தார்.

அத்துடன் அதிக தொகைக்கு கார் எண்ணை ஏலத்தில் எடுத்துவர் என்ற பெருமையை பாலகோபால் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்