ஒன்றாக உயிரை மாய்த்து கொண்ட 4 உயிர் தோழிகள்: சிக்கிய உருக்கமான கடிதம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு தோழிகள் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனாட்சி தாகூர் (20), ஜம்னா (20), ஷீலா (18) மற்றும் ஹக்கி (16) ஆகிய நான்கு பேரும் அங்குள்ள கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதில் ஹக்கி என்ற சிறுமியை தவிர மற்ற மூவரும் திருமணமானவர்கள் ஆவார்கள்.

நால்வரின் சடலங்களும் இன்னும் கிடைக்காத நிலையில் அவர்கள் இறப்பதற்கு முன்னர் எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

அதில், மீனாட்சிக்கு இதய நோய் உள்ளது, ஜம்னா திருமணத்துக்கு பின்னர் தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கவில்லை.

அவர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர். மீனாட்சி மற்றும் ஜம்னா இல்லாமல் ஷீலா மற்றும் ஹக்கியால் வாழ முடியாது என்பதால் நால்வரும் தற்கொலை செய்து கொள்கிறோம், எங்கள் இறப்புக்கு வேறு யாரும் காரணமில்லை என எழுதப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பெண்களின் செருப்புகளும் கைப்பற்றப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்