திருமணத்தன்று புது மாப்பிளையின் செயல்... முகம் வாடிய மனைவி: கொண்டாடிய கிராம மக்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் இளைஞர் ஒருவர் தமது திருமணத்தன்று மனைவியை தவிக்கவிட்டு கால்பந்து விளையாட சென்ற சம்பவம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த இளைஞரின் செயலைக் கண்டு வியந்த இந்திய விளையாட்டுத்துறை அமைச்சரும் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனுமான ராஜ்யவர்தன் ரத்தோர் நேரிடையாக சந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கேரளாவின் மலப்புறம் பகுதியை சேர்ந்தவர் ரித்வான். கால்பந்து வெறியராக இவர் கல்லூரி காலங்களில் பெரும்பாலும் மைதானத்திலேயே வாழ்ந்துள்ளார்.

காலை மற்றும் மாலை வேளைகளில் தவறாமல் கால்பந்து விளையாடி வந்த இவர் தற்போது திருமணத்தன்று மாலையும் அதையே பின்பற்றியுள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்று வீடு திரும்பிய ரித்வானிடம் மனைவி கேட்ட கேள்வி, போட்டி பகல் வேளையில் என்றால் நீங்கள் தாலி கட்டவே வந்திருக்க மாட்டீர்கள் இல்லையா என்பது தான்.

கேரளாவில் மலப்புறம் பகுதி கால்பந்து வெறியர்களால் நிரம்பிய ஒன்றாகும். கடந்த ஞாயிறன்று ரித்வானுக்கும் ஃபாயிதாவுக்கும் திருமணம் என நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அன்றைய நாள் முக்கிய கால்பந்து போட்டியும் இருந்துள்ளது. ரித்வானின் அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய சூழல்.

தமது திருமண நாள் என்பதை மறந்த ரித்வான், தமது மனைவியிடம் மட்டு தகவலை தெரிவித்துவிட்டு மைதானம் நோக்கி பறந்துள்ளார்.

தற்போது ரித்வானின் இந்த முடிவு அந்த கிராம மக்களால் கொண்டாடப்படு வருகிறது. இந்த தகவல் தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கவே விளையாட்டுத்துறை அமைச்சரும் பாராட்டியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்