தேசியக்கொடி ஏற்றியபோது ரயில்வே அதிகாரி செய்த தவறான செயல்!

Report Print Kabilan in இந்தியா

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தேசியக்கொடி ஏற்றும்போது, ரயில் நிலைய துணை அதிகாரி செல்போனில் பேசியபடி கொடிக்கு மரியாதை செலுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 70வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, குடியரசு தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் சென்ட்ரல் ரயில் நிலைய முகப்பு வாயிலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

பின்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அந்நேரம் ரயில் நிலைய துணை அதிகாரி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தாமல், தனது செல்போனில் பேசுகிறார். அவர் தனது சட்டை பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து காதில் வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers