உடல்நலம் குன்றி அமெரிக்கா சென்ற விஜயகாந்த் எப்படியிருக்கிறார்? அவரே பேசி வெளியிட்ட வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், அரசியல் கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசும் குணம் கொண்ட விஜயகாந்திற்கு மக்கள் மனதில் எப்போதும் தனி இடம் உண்டு.

விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரின் கம்பீர குரலை மீண்டும் கேட்க தேமுதிக தொண்டர்களும், பொதுமக்களும் ஆர்வமாக உள்ளனர்.

அதற்கேற்றார் போல அமெரிக்காவில் இருந்து புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வந்த விஜயகாந்த் தற்போது குடியரசு தின வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன், லஞ்சம் இல்லாத ஆட்சியை மக்களோடு இணைந்து உருவாக்குவோம்.

முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers