அன்றே காலில் விழுந்த வாஜ்பாய்! பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழச்சி யார் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சின்னப்பிள்ளை, பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, பங்காரு அடிகளார் மற்றும் நடிகர் பிரபுதேவா உட்பட 8 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும், நடிகர் மோகன் லால், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்றிரவு அறிவித்தது.

இந்நிலையில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள சின்னப்பிள்ளை கூறுகையில், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

வறுமையில் இருக்கும் பெண்களை மீட்டெடுக்க வேண்டும். வறுமையை மீட்க நிறைய திட்டங்கள் கொண்டு வர வேண்டும்.

குறிப்பாக கந்து வட்டி, குடி போதை, போன்றவைகளை கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும். அதற்காக போராடுவேன். இதற்கு முன்னர் எனக்கு நிறைய விருதுகள் கிடைத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

சின்னப்பிள்ளை மதுரை மாவட்டம், அழகர் கோவில் சாலையில் உள்ள கள்ளந்திரி கிராமத்தில் பிறந்து, மதுரையிலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பில்லுச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறார்.

தன்னுடைய 12 வயதில் சின்னப்பிள்ளைக்கும் பில்லுசேரிப் பெருமாளுக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழுந்தைகள் பிறந்தன.

ஆனால் கணவர் பெருமாள் தீராத நோயினால் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். அப்போது தந்தையைம் இழந்த சின்னப்பிள்ளை கூலி வேலை செய்து குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றினார்.

இந்நிலையில் தான் கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார்

இதனால் தமிழகம் முழுக்க பிரபலமானார் சின்னப்பிள்ளை. இதனால் 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் திகதி மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விருது விழாவில், ஷக்தி புரஷ்கார் விருது சின்னப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது.

அப்போது முனனாள் பிரதமர் வாஜ்பாய் விருது கொடுத்த போது சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers