சந்தேகத்தால் மனைவியை கொலை செய்து இரவு முழுவதும் சடலத்துடன் படுத்து தூங்கிய கணவர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சந்தேகத்தால் மனைவியை கொலை செய்து இரவு முழுவதும் சடலத்துடன் படுத்து தூங்கிய கணவனை பொலிசார் கொலை செய்துள்ளனர்.

மதுரையை சேர்ந்த விஜயகுமாருக்கு அவரது மனைவி தெய்வானையின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவம் நடைபெற்ற அன்று, மதுபோதையில் இருந்த விஜயகுமார், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பின்னர். இரவு முழுவதும் அவரது சடலத்துடன் படுத்து உறங்கியுள்ளார். மறுநாள் காலை, தெய்வானையின் தாயார் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான், தெய்வானை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

புகாரின் பேரில், விஜயகுமாரை கைது செய்த பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்