அண்ணன் இறந்த 30 நிமிடத்தில் உயிரிழந்த தம்பி: 60 வயதை கடந்தும் இணை பிரியாத பாசம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

60 வயதை கடந்த உடன் பிறந்த சகோதர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (62), தர்மலிங்கம் (60) ஆகிய இருவரும் சகோதரர்கள்.

இதில் மூத்த சகோதரர் பாலகிருஷ்ணனுக்கு திருமணமாகவில்லை. இளைய சகோதரருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்துள்ளார்.

இச்செய்தியை அறிந்த அவரது சகோதரர் தர்மலிங்கமும் அடுத்த அரைமணி நேரத்தில் உயிரிழந்தார். சாவிலும் இணை பிரியாத சகோதரர்கள் என அப்பகுதி கிராம மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers