9-ஆம் வகுப்பு மாணவிக்கு திருமண ஆசை காட்டிய இளைஞன்! அதன் பின் நடந்த சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பள்ளி மாணவிக்கு திருமண ஆசைகாட்டி கடத்திய வாலிபரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

வத்தலக்குண்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் நாராயணன்(32) டெய்லரிங் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியுடன் பேசி பழகிய இவர், அதன் பின் அந்த மாணவிடம் திருமணம் ஆசைகாட்டி வத்தலகுண்டிற்கு கடத்திச் சென்றுள்ளார்.

சிறுமியின் தந்தை இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, ஆய்வாளர் முத்துமணி தலைமையிலான பொலிசார் வத்தலக்குண்டுக்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர்.

மேலும், சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞர் நாராயணனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடத்தப்பட்ட சிறுமிக்கு 15 வயது எனவும், 9-ஆம் வகுப்பு படித்து வருவதால், அவரைப் பற்றி தகவல்களை பொலிசார் கூறவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers