ஏற்கனவே திருமணமான பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய அஜித்குமார்.. அடுத்தடுத்து வெளியான பகீர் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள சர்ச் ஒன்றின் வாட்ஸ் ஆப் குழு மூலம், மாற்றுத் திறனாளி பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர், அந்த பெண்ணை கர்ப்பிணியாக்கி விட்டு தலைமறைவாகியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் ராதிகா. இவர் 7 வருடங்களுக்கு முன்பு அகமது அலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர், இவர்களுக்கு ஒரு மகள் இருந்த நிலையில், விபத்தில் அகமது அலி உயிரிழந்தார். அதே விபத்தில் ராதிகா ஊனம் அடைந்தார்.

உன்சூர் மாவட்டத்தில் தனது மகளுடன் வசித்து வந்த ராதிகாவை, சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த அஜீத்குமார் என்பவர் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

தங்களுடைய கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான சர்ச் வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து தொலைபேசி எண்ணை எடுத்ததாக கூறி பழகிய அஜீத்குமார், ராதிகாவை நேரில் பார்க்காமல் புகைப்படத்தை மட்டும் பார்த்து காதல் வலை வீசியதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் மைசூருக்கு புறப்பட்டுச்சென்ற அஜீத்குமார், ராதிகாவை வற்புறுத்தி காதலிக்க வைத்ததாகவும், இருவரும் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டே ராதிகாவுடன் குடித்தனம் நடத்திய அஜீத்குமார், ராதிகா கர்ப்பிணியானதும் அவரிடம் இருந்து விலக ஆரம்பித்துள்ளார்.

5 மாத கர்ப்பிணியான ராதிகாவை தவிக்க விட்டுவிட்டு சென்னை வந்த அஜீத்குமார் மீண்டும் மைசூர் செல்லவில்லை. இது தொடர்பாக ராதிகா உன்சூர் பொலிசில் புகார் அளித்தார்.

அஜீத்குமார் மீது மோசடி மற்றும் பலாத்கார வழக்கு பதிவு செய்த கர்நாடக பொலிசார் அவரை கைது செய்வதற்காக சென்னை வந்தனர். கர்நாடக பொலிசுக்கு பயந்து அஜீத்குமார் தண்டையார் பேட்டை காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்குள்ள பொலிசார் தங்கள் அனுமதி இல்லாமல் அவரைக் கைது செய்யக்கூடாது என்று தடுத்துள்ளனர்.

இதனால் பொலிசாருடன் சென்னை வந்த ராதிகா செய்வதறியாமல் தவித்தார். இதுதொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து கண்ணீர் மல்க புகார் அளித்தார்

ராதிகா புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ள காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் உத்தரவிட, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் கலைச்செல்வனை சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விவரித்தார்.

அவர் ராயபுரம் காவல் நிலையத்திற்கு அனுப்ப, அங்குள்ள காவல்துறையினர் வழக்கை விசாரிப்பதில் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது. அதற்குள்ளாக காவல் நிலையத்தில் இருந்த அஜீத்குமாரை பொலிசார் விடுவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஒரு நாள் முழுவதும் கண்ணீர் சிந்தி கதறியும், தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று ராதிகா வேதனை தெரிவித்தார்.

கர்நாடக காவல்துறையினர் தக்க ஆவணங்களுடன் கைது செய்ய வந்திருந்தால், இது போன்ற சிக்கல்கள் ஏற்பட்டிருக்காது என்றும், முறையான ஆவணம் இல்லாமல் பொலிஸ் என்ற பெயரில் குறிப்பிட்ட நபரை கடத்தி செல்ல நேரிடும் என்பதாலேயே, ராதிகாவுக்கு உடனடியாக உதவ இயலவில்லை என்றும் பொலிசார் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers