இன்று இந்தியாவின் 70வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்தியாவின் 70 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

தலைநகர் டில்லியில், ராஜபாதை முதல், செங்கோட்டை வரை, 8 கி.மீ., துாரத்திற்கு, ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடக்கிறது.

அணிவகுப்பு நடக்கும் சாலைகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் பொலிசார் கண்காணித்து வருகின்றனர்.உயரமான கட்டடங்கள் மீது துப்பாக்கி ஏந்திய பொலிசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலங்கார வண்டிகள், ஊர்வலத்தில் இடம்பெறுகின்றன.

இந்த ஊர்வலத்தில், ரயில்வே துறை சார்பிலும் அலங்கார வண்டி இடம் பெறுகிறது. தேசத்தந்தை மகாத்மா காந்தி, தென் ஆப்ரிக்க நாட்டில், இனப்பாகுபாடு காரணமாக ரயிலில் அவமதிக்கப்பட்ட சம்பவம், இதில் தத்ரூபமாக இடம்பெறுகிறது.

தென் ஆப்ரிக்க அதிபர், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers