மனைவியை கட்டாயப்படுத்தி 12 பிள்ளைகளை பெற்ற கணவன்....பக்கத்து வீட்டு சிறுமிக்கு செய்த அநியாயம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

வேலூர் மாவட்டத்தில் 12 குழந்தைகளை பெற்றெடுத்த தந்தை பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷான்பாஷா என்பவர் சாதாரண கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 12 பிள்ளைகள் உள்ளன. குடும்ப கட்டுப்பாடு செய்யாமல், மனைவியையும் செய்யவிடாமல் பிள்ளை பெத்துப்போடும் இயந்திரமாக மனைவியை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், விளையாடி கொண்டு இருந்த மூன்று வயது சிறுமியை பஞ்சு மிட்டாய் கொடுக்கிறேன் என கூறி தனது வீட்டுக்கு பின்புறம் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

அதிர்ச்சியான பெற்றோர், அக்கம் பக்கத்தினர் போலிசுக்கு சென்று புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ஷான்பாஷாவை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்