18 பக்க கடிதம்... கொடூரத்தை செய்வது எனது கணவர் தான்: கடைசியாக உருக்கமான வீடியோவை வெளியிட்ட தந்தை

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவில் மர்மமான முறையில் உயிரிழந்த அனலியா விவகாரத்தில் 5 மாதங்களுக்கு பின்னர் 18 பக்க கடிதம் சிக்கியுள்ளதால் கொலை குறித்து விரிவான விசாரணைக்கு பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவருடைய தந்தை ஹூய்ஜென்ஸ் பாரக்கல் (HuygensParakkal.) மகளுடன் திருமணத்தில் மேடையேறி வாழ்த்து மடல் பாடி கண்ணீருடன் பிரியா விடைக் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த மகள் அனலியாவின் திருமணத்தில் மகளுடன் சேர்ந்து திருமண மேடையில் பாடல் ஒன்றை அவர் பாடியுள்ளார்.

மகளும் தந்தையும் சேர்ந்து பாடும் அந்த வீடியோவை, ஹூயுஜென்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மகளைவிட்டுப் பிரியப் போகிறோம் என்ற வருத்தம் கலந்த அவருடைய குரலோடு கண்ணீர் துளிகளுடன் அந்த பாடல் முடிகிறது. அந்த வீடியோவை பார்ப்போரின் மனதை உருக்கும் வகையில் உள்ளது.

அதனுடன், "justice for annaliya " என்ற உறுதியான நிலைப்பாடுடைய வாசகங்களை அடங்கிய தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அனலியாவின் தந்தைக்கு ஆதரவு சமூக வலைதளங்களில் குவிந்து வருகிறது.

அதே போன்று அனலியா இறப்பதற்கு முன்பு அவருடைய சகோதருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில் தாம் எந்த நேரத்திலும் கொலை செய்யப்படலாம். அப்படியான கொடூரத்தை தன் கணவரால் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

தற்போது இந்த கொலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்