கணவர் இறந்த சில மாதங்களில் மனைவியின் உயிரை குடித்த அதீத காதல்: அனாதையான குழந்தைகள்

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னை அரும்பாக்கத்தில் கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம், சிருகுழார் தெருவை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி கீர்த்திகா (24).

இந்த தம்பதியினருக்கு 4 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகவே கிடந்த மகேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக உயிரிழந்தார்.

இதனால் மனமுடைந்த காணப்பட்ட கீர்த்திகா தன்னுடைய இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு தாயின் வீட்டில் தங்கியுள்ளார்.

அங்கிருந்து தனியார் துணிக்கடை ஒன்றில் வேலை செய்ய ஆரம்பித்துள்ளார். கணவன் இறந்த துக்கத்தால், மகள்கள் இருவரையும் எப்படி கரை சேர்ப்பது என்ற நினைப்பிலே மனமுடைந்து காணப்பட்ட கீர்த்தி, நேற்றைக்கு முன்தினம் மாலை வீட்டில் ஆள் இல்லாத சமயம் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.

வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய உறவினர்கள், கீர்த்திகா சடலமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

இதற்கிடையில் தகவலறிந்து வந்த பொலிஸார் கீர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers