அந்த பொண்ணு தான் காரணம்... தற்கொலைக்கு முன்னர் வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பிய கணவன்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான இளைஞர், ஒரு ஆணும் பெண்ணும் தான் தனது சாவுக்கு காரணம் என வீடியோவாக பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் ஹர்மிந்தர் சிங். இவர் உணவகம் ஒன்றை நடத்தி வந்த நிலையில் சமீபகாலமாக ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

இந்நிலையில் தினேஷ் என்ற பைனான்சியர் மற்றும் அவர் சகோதரியிடம் ஹர்மிந்தர் சிங் தொழில் தொடர்பாக ரூ.3 லட்சம் கடன் வாங்கினார்.

இதற்கு மாதா மாதம் வட்டி கட்டி வந்த அவரால் கடந்த மாதம் வட்டி கட்டமுடியவில்லை.

இதையடுத்து தினேஷும், அவர் சகோதரியும் மன ரீதியாக தினமும் ஹர்மிந்தர் சிங்கை துன்புறுத்த தொடங்கினர். இதனால் வெறுத்து போன ஹர்மிந்த சிங் தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

இதையடுத்து தினேஷும், அவர் சகோதரியும் தான் தனது சாவுக்கு காரணம் என செல்போனில் வீடியோ பதிவு செய்த அவர் தனது மனைவி மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பினார்.

இதன்பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சமயத்தில் உறவினர்கள் வீட்டில் இருந்த ஹர்மிந்த் சிங் மனைவி, வீடியோவை பார்த்துவிட்டு பதறியடித்து தனது வீட்டுக்கு வந்த போது ஹர்மிந்த் சிங் சடலமாக தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் ஹர்மிந்த் சடலத்தை கைப்பற்றினார்கள்.

வீடியோ ஆதாரத்தை வைத்து தினேஷ் மற்றும் அவர் சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers