வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை! நம்பி சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் நூத முறையில் மோசடி செய்த பெண்ணின் சிசிடிவி காட்சிகளை பொலிசார் வெளியிட்டு தேடி வருகின்றனர்.

மதுரை லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் வனிதா, இவர் தன் குடும்பத்துடன் அங்கிருக்கும் வீட்டில் தங்கி வருகிறார்.

வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் வேலைக்கு சென்றுவிடுவதால், வனிதா மட்டும் எப்போதுமே தனியாக இருந்து வருவார்.

இந்நிலையில் பள்ளி, மாணவிகளுக்கான சீருடை தைக்க ஆர்டட் எடுப்பதாக கூறி, வனிதாவின் வீட்டிற்கு பெண் ஒருவர் வந்துள்ளார்.

அப்போது அவர் தான் ஒரு ஆசிரியர் என்றும், தன்னுடன் வேலை பார்க்கும் ஆசிரியர் வேறு ஊருக்கு பணி மாறுதலாகிச் செல்வதால் வீட்டு உபயோகப் பொருட்களை குறைந்த விலைக்கு விற்க இருப்பதாக வனிதாவுடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

வீட்டுப் பொருட்கள் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன என்றவுடன், வனிதாம் பொருட்களை வாங்க திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து பக்கத்து வீட்டுக்கார பெண்ணிடமும் கூறியுள்ளார்.

அதன் பின் இருவரும் பாதி, பாதி என 36 ஆயிரம் ரூபாய் திரட்டி அந்த பெண் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கிருந்த அந்த பெண் இவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு இங்கே நில்லுங்கள் வருகிறேன் என்று சென்றுள்ளார்.

வெகுநேரமாகியும் அந்த பெண் வராததால், நாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இருவரும் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், அந்த பெண்ணை சிசிடிவி காட்சி மூலம் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த பெண்ணைப் பற்றி பொலிசார் தொடர்ந்து விசாரித்த போது, அவர் எல்.ஐ.சி ஏஜென்ட் போல நடித்து பல்வேறு பகுதியில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தற்போது அந்தப் பெண்ணை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers