தேசியவிருது பெற்ற இயக்குநர் மீது சாணியை ஊற்றித் தாக்குதல்

Report Print Arbin Arbin in இந்தியா

தேசிய விருது பெற்ற மலையாளத் திரைப்பட இயக்குநர் டி.ஆர். பிரியாநந்தன் மீது அடையாளம் தெரியாத நபர் சாணியைக் கரைத்து ஊற்றி, தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு ஆதரவாக சமூகஊடகங்களில் கருத்து தெரிவித்து வந்ததையடுத்து, அவர் மீது இந்துவலது சாரி அமைப்புகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

முற்போக்குக் கருத்துக்களையும், சிந்தனைகளையும் உடைய இயக்குநர் பிரியாநந்தன் சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய ஆதரவு தெரிவித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து ஆதரவான கருத்துக்களைப் பதிவிட்டுவந்தார்.

இதற்கு ஆர்எஸ்எஸ், பாஜகவைச் சேர்ந்த சிலர் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டும், அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும் வந்தது.

இந்நிலையில், இன்று காலை திருச்சூரில் உள்ள வலச்சிரா பகுதியில் தனது வீட்டைவிட்டு நடை பயிற்சிக்காக காலை 9மணிக்கு பிரியாநந்தன் வெளியே வந்தார்.

அப்போது பிரியாநந்தன் அருகே சென்ற ஒருவர் அவரை திடீரென தாக்கி, அவர் மீது சாணிக் கரைசலை ஊற்றிவிட்டுத்தப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதியப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மட்டுமின்றி இயக்குநர் பிரியாநந்தன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மலையாளத் திரைப்பட இயக்குநரான இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு எடுத்த புலிஜென்மம் படம் தேசிய விருது பெற்றது. அதுமட்டுமல்லாமல், நெய்த்துகாரன், சூபி பரஞ்ச கதா, பக்தஜனங்களுடே ஸ்ரதக்கு, ஒரு யாத்ரயில், ஜென் நின்னோடு கூடயுண்டு, பாதிராக்காலம் ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். சைலன்ஸர் எனும் திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers