கர்ப்பிணி சகோதரிக்கு நேர்ந்த கதியால் இம்முடிவை எடுத்தேன்: ஆட்டோ ஓட்டுனர் செய்யும் வியக்கவைக்கும் செயல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கர்ப்பிணி பெண்களின் அவசர தேவையின் போது அவர்களை தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்து செல்லும் நபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் கல்புரகி நகரை சேர்ந்தவர் மல்லிகா அர்ஜூன். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கர்ப்பிணி பெண்களை அவர்களின் அவசர தேவையின் போது தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இது குறித்து மல்லிகா அர்ஜூன் கூறுகையில், என் கர்ப்பிணி சகோதரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும் போது அவசர நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவித்தார்.

இதிலிருந்து என ஆட்டோக்களில் கர்ப்பிணிகளின் அவசர நேரத்தில் அவர்களை இலவசமாக அழைத்து செல்கிறேன்.

என்னிடம் 4 ஆட்டோக்கள் உள்ளது, அதில் பெரிய எழுத்தில் என் போன் நம்பர் எழுதப்பட்டுள்ளது.

அதற்கு போன் செய்தால் கர்ப்பிணிகளுக்கு உதவுவோம் என கூறியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் மல்லிகா அர்ஜூனின் ஆட்டோக்களில் நூறுக்கும் மேற்ப்பட்ட கர்ப்பிணி பெண்கள் இலவசமாக அவசர நேரத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers