திருமணம் நெருங்கிய நிலையில் மாயமான இளம்பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் இளம் பெண்ணொருவர் ஒரு மாதத்துக்கும் மேலாக மாயமான நிலையில் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் மல்லியல் கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா (24). இவருக்கு உறவுக்கார இளைஞருடன் கடந்த மாதம் 12ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் 7ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்ற பிரியங்கா அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து பிரியங்காவின் தந்தை கிருஷ்ணா பொலிசில் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மல்லியல் கிராமத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிசாருக்கு தகவல் தரப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த பொலிசார் காணாமல் போன பிரியங்காவின் அழுகிய உடலை கிணற்றிலிருந்து மீட்டனர்.

பொலிசார் விசாரணையில், பிரியங்கா இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர் தான் அவசர அவசரமாக உறவுக்கார இளைஞருடன் திருமணம் நடத்த முடிவு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பிரியங்கா தற்கொலை செய்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers