கணவர் வீட்டில் நடந்தது என்ன? தற்கொலைக்கு முன்னர் இளம்பெண் வரைந்த ஓவியம்: அதிர்ச்சி தகவல்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் புகுந்த வீட்டில் ஏற்பட்ட கொடூர அனுபவங்களை இளம்பெண் ஒருவர் ஓவியமாக தீட்டி வெளிப்படுத்தியுள்ளது தற்போது வைரலாகியுள்ளது.

கேரளாவின் ஆலுவா ஆற்றங்கரையில் இருந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆன்லியா என்ற இளம் தாயாரின் சடலம் பல மர்ம முடிச்சுகளின் மீது விரல் சூண்டுவதாக அமைந்தது.

பின்னர் ஆன்லியா வரைந்த ஓவியம் ஒன்று வெளியாகி, புகுந்த வீட்டில் அவர் அனுபவித்த கொடுமைகளை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது என சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அழுகையுடன் இருக்கும் பெண்மணி, அவரை குறிவைக்கும் பல விரல்கள் என இருந்தது அந்த ஓவியம்.

பொலிசார் ஆன்லியாவின் மரணத்தை தற்கொலை என உறுதிப்படுத்தியும், அவரது குடும்பத்தார் இது கொலை என்றே இப்போதுவரை சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஆன்லியாவின் கணவர் ஜஸ்டின் 4 மாதங்களுக்கு பின்னர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.

ஆன்லியாவின் பெற்றோர் மேற்கொண்ட தொடர் போராட்டங்களின் ஒருகட்டமாகவே ஜஸ்டின் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ஆன்லியா வரைந்துள்ள ஓவியம் அவரது மரணம் தற்கொலை அல்ல கொலை என்றே உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக ஆன்லியா தமது கைப்பட எழுதிய டயரி கண்டெடுக்கப்பட்டு, அதில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் எந்த பெற்றோரையும் உலுக்கும் வகையில் இருந்ததாக தகவல் வெளியானது.

ஒருகட்டத்தில் ஆன்லியாவை மன நலம் பாதிக்கப்பட்டவர் எனவும், அதற்குரிய சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஜஸ்டின் குறிப்பிட்டதாக ஆன்லியா தமது டயரியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லியாவின் தந்தை சீதனமாக வழங்கிய குடியிருப்பிலேயே இந்த கொடூர சம்பவம் அனைத்தும் அரங்கேறியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25 ஆம் திகதி திருச்சூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆன்லியா மாயமானதாக தகவல் வெளியானது.

அதே மாதம் 28 ஆம் திகதி ஆலுவா ஆற்றங்கரையில் இருந்து ஆன்லியா அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பெங்களூருவில் செவிலியராக பணியாற்றி வந்த ஆன்லியா திருமணத்திற்கு பின்னர் கணவரின் நிர்பந்தத்திற்கு வழங்கி வேலையை துறந்தார்.

மட்டுமின்றி ஆன்லியாவின் கணவர் ஜஸ்டின் தமக்கு வெளிநாட்டில் வேலை இருப்பதாக பொய் கூறியே திருமணம் செய்து கொண்டார் என்பது பின்னர் தெரியவந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers