13 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட சடலம்... குடும்பத்தாருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்: வியப்பில் மக்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட ஆணின் சடலம் சிதையாமல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தகவலால் சம்பவப்பகுதிக்கு மக்கள் வெள்ளம் குவிந்தவண்ணம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆமு. 80 வயதான இவர் திடீரென்று மரணமடைந்துள்ளார்.

எந்த நோயும் இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருந்த ஆமு திடீரென்று மரணமடைந்தது அவரது குடும்பத்தாரை உலுக்கியது.

இருப்பினும் 80 வயது வரை வாழ்ந்தவர் என்பதால் கடவுள் அவரை அழைத்துக் கொண்டார் என்றே நம்பியுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தின்போது ஆமுவின் இரண்டாவது மகன் அன்ஸார் வெளிநாடு ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

தந்தையின் திடீர் மறைவு அவருக்கு தெரியப்படுத்திய நிலையில், அவரால் உடன் கிளம்பி வர முடியாத நிலை.

இருப்பினும் தமது தந்தை நல்லடக்கம் செய்ய அனுமதியளித்த அன்ஸார், அடுத்த இரு தினங்களில் வீடு வந்து சேர்ந்துள்ளார்.

இதனிடையே அவரது உறவினர்கள் ஆமுவின் உடலை அடக்கம் செய்துள்ளனர். இந்த நிலையில் ஆமு உள்ளிட்ட சிலரை நல்லடக்கம் செய்யப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றை விரிவாக்கம் செய்யும் பொருட்டு குழி தோண்டியுள்ளனர்.

அப்போது சடலம் ஒன்று சிதையாமல் இருந்துள்ளது. விசாரணை மேற்கொண்டதில் அது 13 ஆண்டுகளுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட ஆமுவின் சடலம் என தெரியவந்தது.

இதனையடுத்து அன்ஸார் குடும்பத்தாருக்கு தகவல் அளித்த மசூதி நிர்வாகிகள், நடந்தவற்றை தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சம்பவப்பகுதிக்கு சென்ற அன்ஸார் அது தம்முடைய தந்தையின் சடலம் என்பதை கண்டறிந்தார்.

இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் மசூதி விரிவாக்கம் செய்யு நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

13 ஆண்டுகளாக சடலம் ஒன்று சிதையாமல் இருக்க என்ன காரணம் என்பது தொடர்பில் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் வெளியாகவே, மசூதி இருந்த பகுதிக்கு மக்கள் வெள்ளம் திரண்டு வருவதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி ஆமுவின் சடலத்தை மீண்டும் நல்லடக்கம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers