ரகசியத்தை கண்டுப்பிடித்த கணவன்.. அழகான மனைவி எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கள்ளக்காதல் ரகசியத்தை கணவர் கண்டுப்பிடித்ததால் குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மைசூரை சேர்ந்தவர் மகேஷ். இவர் மனைவி ஆஷா (30). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இளைஞர் ஒருவருடன் ஆஷாவுக்கு சில காலமாக தொடர்பு இருந்த நிலையில் சமீபத்தில் கணவர் மகேஷ் அதை கண்டுப்பிடித்தார்.

இந்த சூழலை சமாளிக்க முடியாமல் ஆஷா அவமானத்தில் தவித்தார்.

இந்நிலையில் மகேஷ் நேற்று வேலைக்கு சென்றவுடன் தனது இரண்டு குழந்தைகளுக்கும் உணவில் விஷம் வைத்து கொன்றார் ஆஷா.

பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஆஷாவின் சடலத்தை கைப்பற்றியதோடு அருகிலிருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், என்னுடைய சாவுக்கும், என் பிள்ளைகளின் சாவுக்கும் நான் தான் பொறுப்பு. நான் செய்த தவறால் என் குடும்பம் அவமானப்படும் என்பதால் இந்த முடிவை எடுக்கிறேன்.

எங்கள் மூவரின் சடலங்களை ஒன்றாக எரித்து விடும் படி கேட்டு கொள்கிறேன் என எழுதியுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers