நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது இவரா? வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட நடிகையான பானுப்பிரியாவின் வீட்டின் வேலை பார்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அவரது அண்ணன் என்று கூறப்படும் நிலையில், அவர் நடிகை விந்தியாவின் முன்னாள் கணவர் என்பதால் அவரின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகை என்று பெயர் பெற்றிருந்த நடிகை பானுப்பிரியா மீது நேற்று ஆந்திரா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில். பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்க்கும் 15 வயது சிறுமிக்கு அவர் ஒராண்டிற்கும் மேலாக சம்பளம் கொடுக்கவில்லை எனவும், அடித்து துன்புறுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி பானுப்பிரியாவின் அண்ணன் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் அந்த சிறுமியின் தாயார் கூறியிருந்தார்.

இந்நிலையில் பானுப்பிரியாவின் அண்ணன் யார் என்ற போது, அவர் நடிகை விந்தியாவின் முன்னாள் கணவர் ஆவார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு நடிகை விந்தியாவை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்த சில வருடங்களிலே அதாவது 2012-ஆம் ஆண்டு விந்தியா விவாகரத்து செய்து கொண்டார்.

இதையடுத்து தற்போது நடிகை விந்தியா மற்றும் கோபாலகிருஷ்ணனின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers