மனைவி அருகில் போனா நாற்றம் வருது... விவாகரத்து வேணும்! இப்படியும் ஒரு காரணமா?

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மனைவி குளிக்காமல் இருப்பதால் அவர் அருகில் போனாலே நாற்றம் அடிப்பதாக கூறி கணவன் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்த இளைஞருக்கு, இளம் பெண்ணுடன் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடந்த நாளிலிருந்து அவரின் மனைவி குளிக்காமலேயே இருந்துள்ளார். இதனால் அவரருகில் கணவர் செல்லும் போது நாற்றம் அடித்துள்ளது.

மனைவியை குளிக்க சொல்லி வலியுறுத்தியும் அவர் கேட்காததால் அவரை அடித்துள்ளார் கணவர். இதையடுத்து தன்னை கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக மகளிர் ஆணையத்திடம் மனைவி புகார் அளித்தார்.

இது குறித்து கணவரிடம் அதிகாரிகள் விசாரித்த போது, மனைவி குளிக்க மறுக்கிறாள், தலையில் போட ஷாம்பு வாங்கி கொடுத்தால் அதை வைத்து துணியை துவைக்கிறாள் என கணவர் புலம்பியுள்ளார்.

இதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் கூறினார். விவாகரத்துக்கான விசித்திர காரணத்தை அறிந்து அதிகாரிகள் அதிர்ந்தார்கள்.

இதையடுத்து மனைவிக்கு ஒரு மாதம் கெடு விதித்துள்ளார்கள், அதற்குள் தனது பழக்கத்தை மாற்றி கொண்டு அவர் குளிக்க வேண்டும் இல்லையேல் இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers