தூக்கில் தொங்கிய இளம் ஆசிரியை: சகோதரனுக்கும், வருங்கால கணவருக்கும் எழுதிய உருக்கமான கடிதம்

Report Print Vijay Amburore in இந்தியா

ராஜஸ்தான் மாநிலத்தில் 2 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி ஆசிரியை தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கணேஷ் விஹார் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் 26 வயதான நிஷா சௌத்ரி.

இவருக்கும் பாபு என்பவருக்கும் மார்ச் 10ம் தேதி திருமணம் செய்வதாக பேசி முடிக்கப்பட்டிருந்தது. அதற்கான வேளைகளில் இருவீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நிஷா தான் வசித்து வந்த வாடகை வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் வீட்டில் சோதனை மேற்கொள்ளும் போது, டிசம்பர் 18 மற்றும் 19ம் தேதி என குறிப்பிடப்பட்டிருந்த இரண்டு கடிதங்கள் சிக்கியது.

அதில் முதல் கடிதத்தை தன்னுடைய தம்பிக்கும், இரண்டாவது கடிதத்தை வருங்கால கணவர் பாபுவிற்கும் எழுதி வைத்திருந்துள்ளார்.

என்னுடைய தம்பி தான் எனக்கு வாழ்க்கை பற்றிய அனைத்தையும் கற்று கொடுத்தான். அவன் என்னை மிகவும் நேசிக்கிறான். என்னை நன்கு வாழ வைக்க போராடினான். ஆனால் நான் உனக்கு ஒரு நல்ல சகோதரியாக இருக்க முடியவில்லை என எழுதியிருந்தார்.

அதேபோல தன்னுடைய வருங்கால கணவருக்கு எழுதிய கடிதத்தில், நான் உங்களுக்கு நல்ல மனைவியாக இருக்க முடியாது என்னை மன்னித்து விடுங்கள் பாபு என குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இரண்டு கடிதங்களையும் கைப்பற்றியிருக்கும் பொலிஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers