இது அவருக்கு தெரியாது! கணவர் பாலாஜிக்கு தெரியாமல் பிக்பாஸ் நித்யா எடுத்துள்ள அதிரடி முடிவு

Report Print Santhan in இந்தியா

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ்2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிக்பாஸ் நித்யா வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் நிற்பேன் எனவும், இதைப் பற்றி கணவருக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரான பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் சமீபகாலமாக பிரச்சனை ஏற்பட்டு வந்ததால், நித்யா கணவரை விட்டு பிரிய முடிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக நித்யாவும், பாலாஜியும் சென்றனர். அதன் மூலம் இருவரும் பிரபலமானர்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு பின் வெளியில் வந்த நித்யா தன்னால் இயன்ற உதவிகளை இல்லாதவர்களுக்கு செய்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் இன்று தேசிய பெண்கள் கட்சி என்ற பெயரில், அரசியல் கட்சி ஒன்று லாண்ட்ச் ஆகப்போகிறது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நித்யாவும் வந்திருந்தார். அப்போது அவரிடம் பிரபல தமிழ் ஊடகம் ஒன்று சில கேள்விகள் கேட்டது.

அதற்கு நித்யா, இந்த காலத்தில் கூட பெண்கள் அரசியலுக்கு வர பயப்படுகிறார்கள். அரசியல் பெண்களுக்கு ஏற்றது இல்லை, அது அவர்களுக்கு சுத்தமா இலை என்பதை விட,ஒரு சுத்தமான அரசியலை எப்படிச் செய்யலாம் என்றூ களத்தில் இறங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் தான் தேசிய பெண்கள் கட்சி அழைத்தவுடன் நான் ஏற்றுக் கொண்டேன்.

கட்சியின் நோக்கம் குறித்து கேட்ட போது, இதன் நோக்கம், பெண் கல்வி, பெண்களுக்கான அதிகாரம் மட்டுமில்லாம, இளம் பெண்களையும் அரசியலில் ஈடுபடுவதற்கு உத்வேகம் தருவதும்தான். இதுக்காக நாங்க ஒரு அரசியல் பள்ளியையும் உருவாக்கும் திட்டத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் கிராமப் பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு இருக்கும் சம உரிமை, நாடாளுமன்றத்தில் இருப்பதில்லை, இதன் காரணமாகவே வட இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆல் இண்டியா விமன் பார்ட்டியுடன் கூட்டணி வைத்து, நாடாளுமன்ற தேர்தலில் 50 சதவித தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

நீங்கள் தேர்தலில் நிற்க வாய்ப்பிருக்கிறதா என்ற போது, அவர் என அப்பா கொடுத்த நல்ல கல்வி இருக்கு, இதனால் நல்ல அறிவும் இருக்கிறது,

அதனால் இந்த கட்சியின் மூலம் உதவு முடியுமே என்றால் நான் கண்டிப்பாக தேர்தலில் நிற்பேன் என்றும், இது குறித்து கணவர் பாலாஜியிடம் சொல்லவிட்டேர்களா என்ற போது, இதைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers