அண்ணனை காப்பாற்ற சென்று தம்பியும் உயிரிழந்த பரிதாபம்! திருமணமான சில மாதங்களிலே நடந்த துயரம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது, சகோதரர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் சிங்காநல்லூர் பகுதியை அடுத்து திருநகரில் இருக்கும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்காக, திருநகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், கோயமுத்தூர் உப்பிலிப்பாளையம் சி.எம்.சி காலனியிலிருந்து மூன்று நபர்களை வரவழைத்துள்ளனர்.

அவர்கள் கழுநீர் தொட்டியில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரி செய்வதற்காக சாலையில் உள்ள சாக்கடையை திறந்துள்ளனர்.

அப்போது மூன்று பேரில் வந்த முருகன் என்பவர், சாக்கடைக்குள் இறங்கி, அடைப்பை சரி செய்ய முற்பட்டுள்ளார்.

ஆனால் சாக்கடையின் உள்ளிருந்து வெளியே வந்த விஷவாயு, அவரை தாக்கியதால், அவர் அந்த இடத்திலே மயங்கி விழுந்தார்.

இதைக் கண்ட அவருடன் வந்த சித்தப்பா மகனும், அவருடன் வேலைக்கு வந்தவருமான பாண்டிதுரைவ் விஷவாயு வெளியில் வருவது தெரியாமல் தலையை விட்டு காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஆனால் விஷவாயு அவரையும் தாக்கியதால், இரண்டு பேரும் சாக்கடைக்குள் மயங்கிவிழுந்து, பரிதாபமாக அந்த இடத்திலே உயிரைவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் விரைந்து வந்து இரண்டு பேரின் உடலையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த முருகன் மற்றும் பாண்டிதுரை உறவினர்கள் இருவருமே சகோதர்கள், இப்போது தான் பாண்டிதுரைக்கு திருமணமானது. அவள் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்ன சொல்வது என்று கதறி அழுதுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers