காத்தாடி நூலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி: கவனத்தை ஈர்க்கும் புகைப்படம்

Report Print Arbin Arbin in இந்தியா

காத்தாடி திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில் காத்தாடி நூலில் சிக்கி மரணமடைந்த பச்சை கிளியின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கொண்டாட்டங்களில் சமகாலத்தை மறக்கும் மனிதர்கள் தங்களின் சுற்றுவட்டாரத்தில் உள்ள உயிர்கள் தொடர்பில் ஒருபோதும் யோசிப்பதில்லை.

இந்த நிலையிலேயே கத்தாடியின் நூல் கழுத்தில் சிக்கி உயிர் பிரிந்த பச்சை கிளியின் புகைப்படம் ஒன்று வெளியாகி பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.

வட இந்தியாவில் பல மாநிலங்களிலும் கத்தாடி திருவிழாவானது ஆண்டு தோறும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் வழக்கம்போல கத்தாடி திருவிழா களைகட்டிய நிலையில் டுவிட்டரில் இந்த புகைப்படத்தை வெளியிட்ட நபர்,

காத்தாடி திருவிழாவால் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான பறவைகள் கொல்லப்படுவதாகவும், இனிமேலாவது இந்த காத்தாடி திருவிழாவை தடை செய்வீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers