கமல் பட பாணியில் இளம் பெண் கொலை: 3 மகன்களுடன் தந்தை கைது

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் திரைப்பட பாணியில் இளம் பெண்ணை கொன்று புதைந்த 5 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் 65 வயதான ஜெகதீஷ் கரோடியா என்ற கல்லு பைல்வான். இவரது 3 மகன்கள் அஜய் (36), விஜய் (38), வினய் (31). இவர்களின் கூட்டாளி நீலேஷ் காஷ்யப் (28).

கரோடியாவுக்கு 22 வயதான டிவிங்கிள் டாக்ரே என்ற இளம்பெண்ணுடன் தகாத தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரம் கரோடியா குடும்பத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் கரோடியாவுடன் மட்டுமே வசிக்கவும் அவரை திருமணம் செய்து கொள்ளவும் டாக்ரே விரும்பியுள்ளார்.

குடும்பத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் இந்த விவகாரத்தில் முக்கிய முடிவை எடுத்த கரோடியா டாக்ரேவை கொல்ல அவரது மகன்களுடன் திட்டமிட்டு உள்ளார்.

இதனை அடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 16 திகதி டாக்ரேவின் கழுத்தினை நெரித்து கொலை செய்து பின் உடலை எரித்துள்ளர்.

இந்த நிலையில் மாயமான டாக்ரே தொடர்பில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில்,

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பிரேஸ்லெட் மற்றும் பிற ஆபரணங்களை பொலிசார் விசாரணையில் கண்டெடுத்தனர்.

இதனை தொடர்ந்து கரோடியா மற்றும் அவரது 3 மகன்கள் உள்ளிட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களிடம் நடந்த விசாரணையில், கொலை செய்வதற்கு முன் இந்தியில் வெளியான நடிகர் கமல் நடித்த பாபநாசம் என்ற படத்தினை குற்றவாளிகள் பார்த்து உள்ளனர்.

அந்த படத்தில் வரும் காட்சியை போன்று, அவர்கள் நாய் ஒன்றின் உடலை ஓரிடத்தில் புதைத்து உள்ளனர்.

அதன்பின் இந்த இடத்தில் ஒரு மனித உடல் புதைக்கப்பட்டு உள்ளது என தகவலை பரப்பி விட்டு உள்ளனர்.

இதனால் பொலிசார் தகவலறிந்து அந்த இடத்தில் தோண்டி உள்ளனர். அங்கு நாயின் உடல் கிடைத்துள்ளது. பொலிசாரின் விசாரணையை அவர்கள் திசை திருப்பி விட்டுள்ளது தெரிய வந்தது.

இந்த நிலையில், கரோடியா மற்றும் அவரது 2 மகன்களிடம் மூளை ரேகைப்பதிவு என்ற விஞ்ஞான முறையில் பொலிசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்தூரிலேயே முதன்முறையாக இந்த முறையில் விசாரணை நடந்து உள்ளது. இதன் அடிப்படையில் இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers