காணாமல் போனவரின் கால்கள் மட்டும் கிடைத்துள்ளது: திணறும் பொலிஸ்

Report Print Gokulan Gokulan in இந்தியா

தமிழகத்தில் காணமல் போன இளைஞரின் கால் மட்டும் சாலையில் கிடைத்துள்ள நிலையில் அது கொலையா..? விபத்தா..? என்று முடிவு செய்ய முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர்.

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் என்ற இளைஞர் காணமல் போனதாக அவரது குடும்பத்தினர் பொலிசாருக்கு புகார் அளித்தனர்.

இந்நிலையில், திருவள்ளூர்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற பொலிசார் ஒரு கால்கள் மட்டும் கண்டெடுத்தனர்.

இது குறித்து சுதாகரின் உறவினருக்கு தகவல் கிடைத்ததும் அங்கு வந்த அவர்கள் அது சுதாகரனின் கால்கள்தான் என்று உறுதி செய்தனர்.

ஆனால் உடலின் மற்ற எந்த பாகவும் அந்த பகுதியில் இல்லாத நிலையில் இது பொலிசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாகனங்களில் அடிப்பட்டு உடல் பாகம் சிதைத்திருக்க வாய்ப்பு உள்ளதா என்றும், இல்லை கொலை செய்யப்பட்டரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றன.

இது குறித்து அந்த பகுதியில் சென்ற வாகனங்கள், அருகில் உள்ள தொழிற்சாலைகள் என்று எல்லா பகுதியிலும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஆனால் ஒரு கால்கள் மட்டும் வைத்து விசாரிப்பது பொலிசாருக்கு சவாலாகவே உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers