மீண்டும் சர்ச்சையில் சபரிமலை: வயதான வேடமிட்டு சாமி தரிசனம் செய்த பெண்

Report Print Gokulan Gokulan in இந்தியா

சபரிமலையில் கடந்த 8 ஆம் தேதி பெண் ஒருவர், வயதானவர்போன்று வேடமிட்டு சாமி தரிசனம் செய்ததாக தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் பரப்பியதால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

கேரள மாநிலம் சபரி மலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.

இந்நிலையில் ரெகான பாத்திமா ஸ்வீட்டி மேரி உள்ளிட்ட, வேறு மதத்தை சார்ந்த பெண்கள் சபரிமலைக்கு செல்ல முற்பட்டனர். ஆனால் அங்கு பெருமளவில் போராட்டகாரர்கள் குவிந்ததால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தொடர்ந்து கேரள அரசு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பிந்து மற்றும் கனக துர்கா என்ற இரண்டு பெண்கள் சாமி தரிசனத்திற்காக ஐயப்பன் கோவில் வந்து சென்ற காட்சி இடம் பெற்றிருந்தது.

தொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் வன்முறைகள் அதிகரித்தது. பல போராட்டங்களும் நடைபெற்றன. இதனை அடுத்து இது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கேரள அரசு ஐயப்பன் கோவிலில் அமைதியை குலைக்கும் வகையில் அரசு ஏன் இப்படி செயல்படுகின்றது என்று கேள்வி எழுப்பியது.

இந்நிலையில் தொடர்ந்து தற்போது மஞ்சு என்ற 35 வயதான பெண் வயதானவர் போன்று தனது முடியில் வெள்ளை பெயின்ட் அடித்து சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

இதற்கு கேரளாவில் உள்ள புதுயுகம் என்ற பேஸ்புக் குரூப் உதவியதாக தெரிகிறது.

இதுகுறித்து மஞ்சு, 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் செல்ல எதிர்ப்பு இல்லாததால், இது போன்ற வேடம் அணிந்து சென்று முழு பூஜையிலும் கலந்து கொண்டு வந்தேன் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இது குறித்து கேரள அரசு சார்பிலோ பொலிசார் சார்பிலோ எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers