திருமணமான 3 மாதத்தில் மனைவி செய்த மோசமான செயல்: புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு

Report Print Raju Raju in இந்தியா

திருமணமான 3 மாதங்களில் கணவருடன் சண்டை போட்டு கொண்டு மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னயில் உள்ள குரோம்பேட்டை பகுதியின் ராதா நகர், குமணியம்மாள் தெருவை சேர்ந்தவர் சபாரத்தினம் (28).

இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரியங்கா (26) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் கணவருடன் பிரியங்கா சண்டை போட்டு வந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் பிரியங்கா, சபாரத்தினத்தை பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

மனைவி தன்னை பிரிந்து சென்றதால் சபாரத்தினம் மனமுடைந்து காணப்பட்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வீட்டின் படுக்கை அறை மின்விசிறியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சபாரத்தினம் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers