கணவரை பிரிந்து வாழ்ந்த சங்கீதாவுக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் செல்போன் பேசிக் கொண்டே கிணற்றில் விழுந்த சங்கீதா என்ற பெண்ணை காப்பாற்ற முயன்ற இரண்டு பேரும் தண்ணீரில் தத்தளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள சின்ன பிடாரியூரை சேர்ந்தவர் சங்கீதா (28). இவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார்.

கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் சங்கீதா மகனை காப்பாற்ற அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்க்கிறார்.

இந்நிலையில், நேற்று சங்கீதா தன்னுடைய வீட்டை ஒட்டியுள்ள கிணறு அருகே செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது நிலை தடுமாறி, கிணற்றில் விழுந்து விட்டார்.

இதனை கண்ட அங்கிருந்தோர் அலறிதுடிக்க, சுப்பிரமணி, கதிரேசன் ஆகியோர் உடனடியாக சங்கீதாவை காப்பாற்ற கிணற்றில் குதித்தனர்.

ஆனால் கிணற்றில் படிகள் எதுவும் இல்லாததால் சங்கீதாவை காப்பாற்றியும் மேல கொண்டு வர முடியவில்லை.

இதனால் 3 பேருமே கிணற்று நீரில் தத்தளித்தபடியே இருந்தனர்.

பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள், 3 பேரையும் கயிறுகட்டி மேலே பத்திரமாக மீட்டு கொண்டனர்.

இதனையடுத்து மீட்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers