2 மாதத்தில் முடிவுக்கு வந்த காதல் திருமணம்: தூக்கில் பிணமாக தொங்கிய புதுப்பெண்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் இவரது மகன் திருமூர்த்தி (26).

இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த பலபந்தகொட்டா பகுதியை சேர்ந்த ஆர்த்தி (21). என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பெற்றோர் இல்லாத ஆர்த்தி அவரது அண்ணன் அருண்குமார் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார் இதையடுத்து புதுமணதம்பதிகள் ஜோலார்பேட்டை மேட்டுசக்கரகுப்பத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்

இந்நிலையில் ஆர்த்தி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கில் பிணமாக தொங்கிக் கிடந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் பொலிசார் மர்மமான முறையில் இறந்த ஆர்த்தியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆர்த்தி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...