உயர் அதிகாரிகளுடன் மனைவிக்கு தொடர்பு: கையில் தாலியுடன் கதறி அழும் பொலிஸாரின் வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பொலிஸ் ஒருவர், உயர் அதிகாரிகள் தன்னுடைய மனைவியுடன் தகாத உறவு வைத்து வாழ்க்கையை சீரழித்து விட்டதாக கதறி அழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜா. இவருடைய மனைவி சவிதாவும் அதே ஆயுதப்படையில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மகன் இருக்கிறார்.

இந்த நிலையில் ராஜா மனைவிக்கு கட்டிய தாலியுடன் கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோ காட்சி ஒன்று இணையம் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், குழந்தையும் தாலி கட்டிய கணவரும் வேண்டாம் என அறுத்து எறிந்துவிட்டு சவிதா தங்களை அனாதையாக்கிவிட்டு சென்றதாக கூறி புலம்புகிறார்.

ராஜா ஏற்கனவே முதல் திருமணம் செய்து அதன்மூலம் இரண்டு பெண்குழந்தைகள் உள்ளன. அதேபோல சவிதாவும் ஏற்கனவே திருமணம் செய்தவர்.

தன்னுடைய மனைவிக்கு விழுப்புரம் மயிலத்தில் உள்ள டி.எஸ்.பி செல்வராஜ், ஆயுதப்படை ஆய்வாளர் நெடுஞ்செழியன், போலீஸ் எஸ்.ஐ வசந்த் மற்றும் பாலாஜி ஆகியோருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், இந்த விவகாரம் ஆர்.ஐ சிவராம ஜெயம் என்பவருக்கு தெரியும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும், தான் இதற்கு முன்பு பல தவறுகள் செய்திருந்தாலும், தற்போது திருந்தி வாழ்வதாகவும் என்னுடைய மகள்கள், மகனுக்கு நல்லது செய்ய ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers