சிறுமி ஹரிணிக்கு ரஜினி குடும்பத்திலிருந்து வரவிருக்கும் இன்ப அதிர்ச்சி

Report Print Vijay Amburore in இந்தியா

காணாமல் போய் 100 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டிருக்கும் சிறுமி ஹரிணியை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடோடி சமூகத்தைச் சேர்ந்த வெங்கடேசன் – காளியம்மாள் தம்பதியினரின் 2 வயது மகள் ஹரிணி கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக, கடத்தப்பட்டார்.

பெரிய அரசியல்வாதியோ, பணக்காரரின் மகளோ இல்லாமல் இருந்தாலும் தமிழக மக்கள் பலரும் சொந்த செலவில் போஸ்டர் அடித்தும், ஹரியினியின் புகைப்படத்தை தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டும் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இதுஒருபுறமிருக்க மகளை பிரிந்த சிறுமியின் தாய் காளியம்மாள் சரியாக சாப்பிடாமல் தினம்தோறும் அழுதுகொண்டே இருந்துள்ளார்.

இதற்கிடையில் காளியம்மாளை செல்போனில் அழைத்த நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ஆறுதல் வார்த்தை கூறியதோடு, தங்களுடைய நிறுவனம் சார்பிலும் சிறுமி தேடப்பட்டு வருவதாக தெரிவித்திருந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தீவிரமாக களமிறங்கி பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில், திருப்போரூரில் சங்கீதா என்ற பெண்ணிடம் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையை மீட்ட பொலிஸார் பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் லதா ரஜினிகாந்த் சிறுமி ஹரிணியை சந்திக்க விருப்பம் தெரிவித்து அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இன்று காலை சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழும் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers