திருமணமாகி 542 நாட்கள்...இரண்டு முறை கரு கலைந்தது: ஒரே சேலையில் தூக்கியில் தொங்கிய தம்பதியினர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருப்பூர் மாவட்டத்தில் திருமணமாகி 542 நாட்களில் ஒரே சேலையில் புதுமணத்தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முத்துக்கிருஷ்ணன் - தங்கமணி ஆகிய இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் நடத்தினர். இதற்கிடையில் தங்கமணிக்கு இரண்டு முறை கர்ப்பமாகி கரு கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவி இருவரும் சில நாட்களாக பேசாமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சமீபகாலமாக முத்துக்கிருஷ்ணனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை முடிந்து தினமும் வீட்டிற்கு வரும் முத்துக்கிருஷ்ணன் மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், தங்கமணிக்கு அவரது தந்தை வெள்ளையங்கிரி போன் செய்துள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் இருவரும் போன் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த வெள்ளியங்கிரி, தனது உறவினர்களுடன் மகளின் வீட்டிற்கு சென்றார்.

அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை நீண்டநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து வீட்டின் ஜன்னலை உடைத்து பார்த்தபோது வீட்டினுள், முத்துக்கிருஷ்ணனும், தங்கமணியும் ஒரே சேலையில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பல்லடம் பொலிசில் வெள்ளியங்கிரி கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers