நடிகர் ரஜினியை கிண்டல் செய்த கிரிக்கெட் ஜாம்பவான் முரளிதரன்: வைரலாகும் சர்ச்சை வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கிண்டல் செய்து கிரிக்கெட் ஜாம்பவான் முரளிதரன், தன்னுடைய அரசியல் வருகை குறித்து பேசியிருக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், சமீப காலமாகவே மலையகப் பகுதி மக்களின் நலன்களுக்கான சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் ஹட்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்வி மற்றும் மலையக மக்களிடம் கிரிக்கெட் விளையாட்டை வளர்க்கும் விதம் பற்றிய கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அதற்கு பதிலளித்து கொண்டிருக்கையில், அவருடைய அரசியல் வருகை பற்றிய கேள்வியும் எழுப்பப்பட்டது.

உடனே அதற்கு கிண்டலாக பதிலளித்த முரளிதரன், "இந்தியாவில் ரஜினிகாந்த் சொல்வது போலதான் வார்றனா? வரலையா? வார்றனா? வரலையா? அந்த மாதிரிலாம் நாமப் பண்றது இல்ல. நமக்கு அரசியல்ல விருப்பம் இல்ல’ என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்