இந்தியாவில் மீண்டும் ஆட்சியமைக்கப் போவது யார்? கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், இண்டியா டிவி - சி.என்.எக்ஸ்., நிறுவனம்' இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், பாஜக தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு 257 இடங்கள் கிடைக்கும்.

பெரும்பான்மையான 272 பேரின் ஆதரவு பெறுவதற்கு, பாஜக கூட்டணிக்கு, மேலும் 15 பேரின் ஆதரவு தேவைப்படும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு கூட்டணிக்கு 146 இடங்கள் கிடைக்கும். மற்றக் கட்சிகளுக்கு 140 இடங்கள் கிடைக்கும். பாஜக 223 தொகுதிகளிலும், காங்கிரஸ் 85 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

தே.ஜ கூட்டணியில், பாஜக சிவசேனா, அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, புதுச்சேரியில், என்.ஆர். காங்கிரஸ், தமிழகத்தில் பா.ம.க உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் இடம்பெறும்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தி.மு.க, தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறும்.

சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், அதிமுக, திரிணமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ரீய ஜனதா தளம், அ.ம.மு.க., சுயேச்சை உள்ளிட்டவை மற்ற கட்சிகள் பிரிவில் இடம்பெற்றுள்ளன

இவ்வாறு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகளின் ஆதரவுடன் பாஜகவுக்கு அதிக வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் நிலவரம்

இந்த கருத்துக் கணிப்பின்படி தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளில் தி.மு.க 21ல் வெற்றி பெறும். அ.தி.மு.க., 10, தினகரனின், அ.ம.மு.க 4, காங்கிரஸ் 3, பா.ம.க. ஒரு தொகுதியில் வெற்றி பெறும் என, கணிக்கப்பட்டுள்ளது. '

புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியில், ரங்கசாமியின் அனைத்திந்திய என்.ஆர். காங்கிரஸ் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers