சீமானுக்கு எதிராக ஆவேசமாக பேசிய பெண்: வைரலான வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டு பாசரை சார்பில் நடைபெற்ற “இன எழுச்சி முழக்கம்” குறுந்தகடு வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யை ,விமர்சித்து பேசிய சீமானை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

விஜய் குறித்து பேசும்போது “என் தம்பி விஜய் இருக்கான்; சர்க்கார் படத்துல பேசுனா ஆமா பேசுனேன்னு சொல்லவேண்டியது தானே. அம்மா ஜெயலலிதா அவர்களின் மீது நான் ரொம்ப பற்று கொண்டவன்; முதல்வர் அவர்களை சந்தித்து..” என்று கையை கட்டியபடி நடித்து காட்டிய சீமான் “உண்மையிலேயே நீ என் தம்பியா? எடப்பாடி பழனிச்சமிக்கெல்லாமாடா பயப்படுறது; உன்மேல பெரிய மரியாதை வச்சிருந்தேன்டா.

ஒரு விரல் புரட்சியாம். ஒரு விரல் புரட்சி.. என்னத்த புரட்சி.. புரட்சி கரச்சினுகிட்டு.. என் படத்துலலாம் நடிக்க மாட்டாரு. ஆனால் , நான் பேசுறதலாம் பேசி நடிப்பாரு என்று விமர்சித்துள்ளார்.

சீமான் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் படம் உருவாகிறது என்றும், அந்த படத்திற்கு பகலவன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது என்றும் பல ஆண்டுகளாக பேசப்பட்டுவந்தது.

ஆனால், என்ன காரணத்தாலோ அந்த படம் உருவாகாத நிலையில், சீமான் படத்தில் விஜய் நடிக்கவில்லை அதன் காரணமாக தான் சீமான் விஜயை விமர்சிக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், #திருட்டுபயசீமான் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர்.

இந்நிலையில், விஜய்யின் ரசிகை ஒருவர், சீமானின் இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்