திருமணமான 21 நாட்களில் விதவையான அழகிய இளம்பெண்: கதறி அழுத பரிதாபம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த நிலையில், திருமணமான 21 நாட்களில் புதுப்பெண் விதவையாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் கிரட்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஷைலு டோமர் (22) இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் 21 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமண வீடியோ கேசட்டில் தங்களில் குடும்பத்தினர் பெயரை சேர்க்கும் விடயம் தொடர்பாக வீடியோ கடைக்கு ஷைலு தனது நண்பர் ஷிவம் உடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்த போது சாலை நடுவில் ஒரு மாடு குறுக்கில் வந்தது.

அப்போது ஷைலு பிரேக் போட்ட நிலையில் அருகில் சைக்கிளில் வந்த ஷயாம்சுந்தர் (12) என்ற சிறுவன் மீது பைக் மோதியது.

பின்னர் வேகமாக பைக்கில் இருந்து ஷைலுவும், ஷிவமும் கீழே விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே புதுமாப்பிள்ளை ஷைலு உயிரிழந்தார்.

ஷவம் மற்றும் சிறுவன் ஷயாம்சுந்தருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

திருமணமான 21 நாட்களிலேயே கணவரை இழந்த புதுப்பெண் கதறி துடித்தது காண்போரை கண்கலங்கை வைத்தது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers