சிறையில் உள்ள சசிகலாவுடன் பிரபல தமிழ்ப்பட கதாநாயகி சந்திப்பு: என்ன பேசினார்கள் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

பெங்களூரு சிறையில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நடிகையும், முன்னாள் எம்பியுமான‌ விஜயசாந்தி சந்தித்து பேசியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்டுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகையும், முன்னாள் எம்பியுமான விஜய சாந்தி சந்தித்துப் பேசியதாக தகவல் வெளி யானது.

இதுகுறித்து சிறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், தற்போது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக உள்ள விஜய சாந்தி, சசிகலாவிடமும், சிறைத் துறையிடமும் முன் அனுமதி பெற்று சந்தித்தார்.

இருவரும் சுமார் 1 மணி நேரம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர் என தெரிவித்தனர்.

பெங்களூருவில் சசிகலாவுக்கு நெருக்கமான சிலர் கூறுகையில், சசிகலாவுக்கும் விஜயசாந்திக்கும் நீண்டகாலம் தொடர்பு உள்ளது. ஜெயலலிதா வின் மறைவுக்கு பிறகும், நடராஜனின் மறைவுக்கு பிறகும் சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

வருகிற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தருமாறு சசிகலாவிடம் விஜயசாந்தி கேட்டதாக தெரிகிறது என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers