ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கர்நாடகா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Koppal நகரிரை சேர்ந்த Shekhariah Beednal (42) அவரது மனைவி Jayamma(39) மற்றும் அவரது நான்கு மகள்கள் Basamma, Gauramma , Savithri, Parvathi ஆகியோர் இறந்த நிலையில் வீட்டுக்குள் கிடந்துள்ளனர்.

பெற்றோர் விஷம் குடித்து இறந்தும் பிள்ளைகள் தூக்கில் தொங்கியும் உயிரை மாய்த்துக்கொண்டனர். இவர்கள் 6 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.

வங்கி லோன் தொடர்பாக குடும்பத்தினர் அதிக முறை முயற்சி செய்து வந்ததாகவும் அது கிடைக்காமல் போனதால் உயிரை மாய்த்திருக்கலாம் என அருகில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers