நடு இரவில் ரத்தக்காயங்களுடன் அலறியபடியே தெருவில் ஓடிவந்த பெண்

Report Print Vijay Amburore in இந்தியா

தேனி மாவட்டத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அரிவாளால் வெட்டிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (65). இவருடைய மனைவி மாரியம்மாள் (52).

பாஸ்கரன் அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகன நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவியின் நடத்தையின் மேல் சந்தேகம் எழுந்ததால் கடந்த சில நாட்களாகவே சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைக்கு முன்தினம் இரவு பணிக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய பாஸ்கரன், மனைவியை எழுப்பி சண்டையிட்டதாக தெரிகிறது.

அதன் பின்னர் ஆத்திரமடைந்த பாஸ்கரன் அரிவாளை எடுத்து, மனைவியை வெட்டியுள்ளார். இதில் ரத்த காயங்களுடைய தப்பிய மாரியம்மாள், உதவி கேட்டு தெருவில் அலறியபடியே ஓடியுள்ளார்.

சத்தம் கேட்டு விழித்தெழுந்த அக்கம்பக்கத்தினர் மரியம்மாளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், பாஸ்கரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers