அனில் அம்பானியை சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

Report Print Gokulan Gokulan in இந்தியா

தங்கள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கியை செலுத்தாததால் அனில் அம்பானியை நாட்டிலிருந்து வெளியேற தடை விதித்து சிவில் சிறையில் அடைக்க வேண்டும் என எரிக்ஸன் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் தொடர்து அனில் அம்பானிக்கு நஷ்டம் ஏற்பட்டதால், அவர் சகோதரரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நெட்வெர்க்-ன் ஜியோ அலைக்கற்றை கோபுரங்களை வாங்க முன்வந்தார்.

இந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் முன்பு பயன்படுத்தி வந்த அலைக்கற்றை நிறுவனமான எரிக்ஸனுக்கு பாக்கியை செலுத்தாமல் இருந்துள்ளது.

அதனால் எரிக்ஸன் நிறுவனம் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அந்நிறுவனத்திற்கு அனில் அம்பானி 550 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

முதலில் செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் வழங்க உத்தரவிட்ட நிலையில், அனில் அம்பானி பணம் வழங்காததை அடுத்து, எரிக்ஸன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 15ஆம் திகதிக்குள் 550 கோடி வழங்க அனில் அம்பானிக்கு உத்தரவிட்டப்படது.

ஆனால் அதையும் செலுத்தாத அனில் அம்பானி மீதும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் மீதும் எரிக்ஸன் நிறுவனத்தின் சார்பில் பார்கவா வி தேசாய் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் அனில் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும், மேலும் பணம் வழங்கும் வரை அவரை நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்க வேண்டும், பணம் செலுத்தும் வரை சிவில் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers